இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
x

வீரவநல்லூரில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூரில் இந்து மக்கள் கட்சி சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டியும், பனையில் இருந்து கள் இறக்க அனுமதி வேண்டியும் பஸ்நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். சேரன்மாதேவி ஒன்றிய தலைவர் சோடாமணி முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் கண்டன உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாக்கியசாமி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரமேஷ், பொருளாளர் முத்துப்பாண்டி, விவசாய அணி தலைவர் பெருமாள், இளைஞரணி துணைத் தலைவர் மாரிச்செல்வம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட செயல் தலைவர் சின்னத்துரை செய்திருந்தார்.


Next Story