அனுமதியின்றி விநாயகர் சிலையை கரைக்க வந்த இந்து தமிழர் முன்னணி பிரமுகர்


அனுமதியின்றி விநாயகர் சிலையை கரைக்க வந்த இந்து தமிழர் முன்னணி பிரமுகர்
x

அனுமதியின்றி விநாயகர் சிலையை கரைக்க வந்த இந்து தமிழர் முன்னணி பிரமுகர்

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அய்யர்பாடி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த இந்து தமிழர் முன்னணி பிரமுகர் அன்பழகன் என்பவர், தனது வீட்டில் வைத்து பூஜை செய்த சிலையை நடுமலை ஆற்றில் கரைப்பதற்காக கொண்டு சென்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள், அவரை தபால் நிலையம் அருகே தடுத்து நிறுத்து வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து அறிந்த வால்பாறை போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அன்பழகனை விநாயகர் சிலையுடன் பாதுகாப்பாக அழைத்து சென்று புதுத்தோட்டம் எஸ்டேட் அருகில் உள்ள சிற்றோடையில் அவர்களது குடும்பத்தினருடன் சென்று சிலையை கரைக்கச் செய்தனர். இந்த சம்பவத்தால் வால்பாறையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story