இந்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா; எச்.ராஜா பங்கேற்பு


இந்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா; எச்.ராஜா பங்கேற்பு
x
தினத்தந்தி 8 May 2023 12:15 AM IST (Updated: 8 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இந்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடந்தது. விழாவில் எச்.ராஜா பங்கேற்றார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா மற்றும் மாநாடு நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஈசுவரன் தலைமை தாங்கினார். மன்னார்குடி ஜீயர் ராமானுஜர் சுவாமிகள் ஆசி வழங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் இந்து வியாபாரிகள் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக, தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த சங்கத்தில் 6 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். இது, வரும் ஓராண்டுக்குள் 60 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட சங்கமாக வளரும். தமிழகத்தில் மதுவால், மக்கள் வாழ்க்கை நிலை பின்னோக்கி செல்கிறது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என கவர்னர் அறிக்கையாக கொடுத்தால், இந்த தி.மு.க அரசு கலைக்கப்படும். தமிழகத்தில் இந்து கோவில்களுக்கான சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கவர்னர் ஆதாரத்துடன் கூறுகிறார். ஆனால், 3 ஆயிரம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறுகிறது. திருவண்ணாமலை கோவில்களில் அன்னை தெரசா படம் போட்டு வந்து விபூதி பொட்டலம் வினியோகம் செய்யப்பட்டதற்கு, நிர்வாகத்தில் உள்ளவர்களை பணி நீக்கம் செய்யாமல் அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையைச் சொல்லி எடுக்கப்பட்ட கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிடுவதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story