இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 March 2023 12:30 AM IST (Updated: 14 March 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தேனி ராஜவாய்க்காலில் வசிக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி ராஜவாய்க்கால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றாமல், அவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், 'தேனி ராஜவாய்க்கால் பகுதியில் முன்பு விவசாய பயன்பாடு இருந்தது. தற்போது 90 சதவீதம் வீட்டுமனையாக மாறிவிட்டது. வாய்க்கால் எந்த பாசன பயன்பாட்டிலும் இல்லை. இங்கு 170 குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்கள் உள்ளன. வாய்க்கால் தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. பயன்பாடு இல்லாத வாய்க்காலை தூர்வாரி, சாக்கடை கழிவுநீர் செல்ல தேவையான இடம்போக இருபுறமும் சிமெண்டு கரை அமைக்க வேண்டும். கரையோர பகுதியில் நீண்டகாலமாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கும் வரை அவர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story