அரசு பள்ளியில் வரலாற்று கண்காட்சி


அரசு பள்ளியில் வரலாற்று கண்காட்சி
x

ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று கண்காட்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை

ஆரணி,

ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று கண்காட்சி நடைபெற்றது. இதில் பலவிதமான வரலாற்று பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டது. தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமை தாங்கினார்.

ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர் ஆர்.விஜயன் கலந்து கொண்டு, படைப்புகள், ஆய்வுப்பணி மேற்கொள்ளும் போது கிடைக்கப்பெற்ற பண்டைக்கால பொருட்கள், பட காட்சிகளை மாணவிகளிடையே விளக்கி கூறினார்.

அப்போது சோழர் காலத்து வாள், முகலாயர் காலத்து குத்துவாள்கள், பழங்காலத்து அம்பு, எலும்பில் செய்யப்பட்ட மணிமாலை, நீர்வாழ் உயிரினங்களின் எலும்பு படிமங்கள். ஓலைச்சுவடிகள், நவாபுகள் காலத்து கூஜா, ஆங்கிலேயர் காலத்து சாட்டை, சமஸ்கிருத செப்பேடு என பலவிதமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

சந்திரயான் - 3 சோதனையின் போது பயன்படுத்தப்பட்ட வெள்ளை மணல், திருச்செங்கோடு அருகிலிருந்து கொண்டுவரப்பட்டு, அதன் மீது சந்திரயான் - 3 ன் மாதிரி வடிவம் வைக்கப்பட்டிருந்தது.

பள்ளி வரலாற்று ஆசிரியர்கள் ஜி.வித்யா, எம்.பூங்கோதை ஆகியோர் மாணவிகளுக்கு கண்காட்சி பொருட்களை விவரித்துக் கூறினர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.


Related Tags :
Next Story