அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறை கருத்தரங்கம்


அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறை கருத்தரங்கம்
x
தினத்தந்தி 8 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 6:48 PM GMT)

கும்பகோணம் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறை கருத்தரங்கம் நடந்தது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் அரசு தன்னாட்சி ஆண்கள் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வர் தனராஜன் தலைமை தாங்கினார். இந்திய பண்பாட்டுத்துறை தலைவர் தங்கராஜ் பேசினார். சேலம் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் தென்னரசு கலந்துகொண்டு "மின்னணு ஊடக வழியாக வரலாற்றைக்கற்பித்தல்" என்ற தலைப்பில் பேசினார். கருத்தரங்கில் ஆங்கிலத்துறைத்தலைவர் சரவணன், புவியியல் துறைத்தலைவர் கோபு, உதவிப்பேராசிரியர் மணியோசை, வணிக மேலாண்மையியல் துறைத்தலைவர் மோகன்ராஜ், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சாமிநாதன் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக வரலாற்றுத்துறைத்தலைவர் சகாதேவன் வரவேற்றார்.முடிவில் வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story