எச்.ஐ.வி. குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு


எச்.ஐ.வி. குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
x

எச்.ஐ.வி. குறித்து கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர்

பெரம்பலூரில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சமூகத்தில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்காமலும், ஒதுக்காமலும், சக மனிதர்களை போன்று அன்பு செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சியை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நாட்டுப்புற கிராமிய கலை நிகழ்ச்சி மூலம் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எச்.ஐ.வி. நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட திட்ட மேலாளர் (பொறுப்பு) சுமதி மற்றும் எச்.ஐ.வி. உடன் வாழ்பவர்களுக்கான தொண்டு நிறுவனம், நம்பிக்கை மையம், சுகவாழ்வு மைய ஆலோசகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்னும் 9 நாட்களுக்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story