ரேஷன் அரிசி பதுக்கல்


ரேஷன் அரிசி பதுக்கல்
x

ரேஷன் அரிசி பதுக்கல்- கடத்தல்; 2 பேர் கைது

திருநெல்வேலி

நெல்லை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே ராஜபாண்டி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 60) என்பவர் தனது வீட்டு பகுதியில் 15 மூடைகளில் 600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தார். இதையடுத்து போலீசார், சுப்பிரமணியனை கைது செய்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் நெல்லை தெற்கு புறவழிச்சாலை குறிச்சி சந்திப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் 25 மூடைகளில் 750 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த தவமுருகன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

1 More update

Next Story