மாநில அளவிலான ஆக்கி போட்டி


மாநில அளவிலான ஆக்கி போட்டி
x

மதுரையில் மாநில அளவிலான ஆக்கி போட்டி நடந்தது.

மதுரை


மதுரை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் மாநில அளவிலான ஆக்கி போட்டிகள் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் உள்ள ஆக்கி மைதானத்தில் கடந்த 24-ந் தேதி தொடங்கி வருகிற 30-ம் தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள தலைசிறந்த அணிகளான இந்தியன் வங்கி, சென்னை அணி, ஜி.எஸ்.டி. மற்றும் சென்ட்ரல் எக்சைஸ் அணி, சென்னை அணி, போஸ்டல் ஆக்கி கிளப் சென்னை அணி, மதுரை ரிசர்வ் லையன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, ஊட்டி எம்.ஆர்.சி.வெலிங்டன் அணி, தென் மண்டல காவல்துறை மதுரை அணி, சென்னை சிட்டி போலீஸ் அணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை அணி, திருநகர் ஆக்கி கிளப் மதுரை அணி, தென்னக ெரயில்வே சென்னை அணி, சோழா திருச்சி அணி, மதுரை வாடிப்பட்டி ஆக்கி அணி, தமிழ்நாடு காவல்துறை சென்னை அணி உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றன. கடந்த 2 நாட்களாக லீக் சுற்று பேட்டிகள் நடந்து வருகிறது.

நேற்று காலை நடந்த போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை மதுரை வாடிப்பட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அடுத்து நடந்த போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணியை மதுரை ஜி.கே.மோட்டார்ஸ் அணி 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மாலையில் நடந்த போட்டியில் சென்னை போஸ்டல் அணியை கோவில்பட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கிலும், ராமநாதபுரம் அணியை சென்னை சிட்டி போலீஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 12 அணிகள் கால் இறுதி போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அந்த போட்டிகள் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. இறுதி போட்டி வருகிற 30-ந் தேதி நடக்கிறது. அதில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ராஜாமணி நினைவு கோப்பையும், 2-வது பரிசாக கனகமணி அம்மாள் நினைவுக்கோப்பையும், 3-வது பரிசாக மனோகரன் நினைவு கோப்பையும், 4-வது பரிசாக சவுந்தரராஜன் நினைவுக்கோப்பையுடன், பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. போட்டியை கண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, பயிற்சியாளர் குமரேசன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story