மாவட்ட அளவிலான ஆக்கி, டென்னிஸ் போட்டிகள்


மாவட்ட அளவிலான ஆக்கி, டென்னிஸ் போட்டிகள்
x

ராமநாதபுரத்தில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற ஆக்கி, டென்னிஸ் வீரர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற ஆக்கி, டென்னிஸ் வீரர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு வழங்கினார்.

விளையாட்டு போட்டி

இந்திய ஆக்கி விளையாட்டின் முன்னோடி மேஜர் தியான்சந்த் பிறந்த தினத்தையொட்டி தேசிய விளையாட்டு தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆக்கி மற்றும் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆண்களுக்கான ஆக்கி பொதுபிரிவு போட்டியில் அரசு விளையாட்டு விடுதி மாணவர்கள் அணி முதலிடமும், ராமநாதபுரம் டவுன் ஆக்கி கிளப் அணி 2-வது இடமும் பெற்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சுகிர்தன்ராஜ் முதலிடமும், ராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளியை சேர்ந்த முகமதுரிவாஷ் 2-வது இடமும், சாந்தன் 3-வது இடமும் பெற்றனர்.

பரிசுகள்

டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் பெண்கள் பிரிவில் பிரனதி ஜோஷ்னா முதலிடமும், ஐஸ்வர்யா இரண்டாமிடமும், ஜெய் ஸ்ரீ மூன்றாமிடமும் பெற்றனர். ஆக்கி மற்றும் டென்னிஸ் ஒற்றையர் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஆக்கி சங்க செயலாளர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், ஆக்கி பயிற்சியாளர் தாமரைக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.Next Story