புனித திருக்கல்யாண மாதா திருத்தல திருவிழா கொடியேற்றம்
பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல திருவிழா கொடியேற்றம் நடந்தது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தட்டார் மடம் அருகே பொத்தகாலன்விளையில் புனித திருக்கல்யாண மாதா திருத்தல திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தல அதிபர் வெனிசுகுமார், தூத்துக்குடி பங்குதந்தை சேவியர் அருள்ராஜ் ஆகியோர் விழா கொடியேற்றினர். தொடர்ந்து ஜெபமாலை, அருளுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
தொடர்ந்து வருகிற 21-ந்தேதி வரை தினமும் நவநாள் திருப்பலி, அருளுரை, ஜெபமாலை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஜன. 22-ந் தேதி மாலை 6.15 மணிக்கு மறைமாவடட ஆயர் ஸ்டீபன் தலைமையில் ஜெபமாலை, அருளுரை, நற்கருணை ஆசீரை. தொடர்ந்து 110-ஆம் ஆண்டு தேர்ப்பவனி நடைபெறுகிறது. இரவு 8.30மணிக்கு திருவிழா மாலை ஆராதனை நடைபெறும். வருகிற 23-ந் தேதி மாலை 4.30மணிக்கு மலையாள திருப்பலியும், திருத்தல பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது.
Related Tags :
Next Story