உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் பகுதியிலுள்ள அலுவலகங்களுக்கு விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் பகுதியிலுள்ள அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் வாக்குப்பதிவுக்காக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், இதர நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், அரசு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (சனிக்கிழமை) முழு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story