விடுமுறை தினம்: பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!


விடுமுறை தினம்: பழனி முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!
x

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்,

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று வார விடுமுறை என்பதால் கேரளா, கர்நாடகா மாநில பக்தர்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. இதனால் அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில், ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், தரிசன வழிகள் ஆகியவற்றில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

கூட்டம் காரணமாக வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்க நேர்ந்தது. அந்தவகையில் சுமார் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Next Story