புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா
குன்னூர் அருகே புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா நடந்தது.
குன்னூர்
குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனி பகுதியில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் நீலகிரி மாவட்டத்தின் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி, ஜெபம் நடந்தது. திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ், குன்னூர் வட்டார முதன்மை குரு ரொசாரியோ, பங்கு தந்தை ஆரோக்கியராஜ், உதவி பங்கு தந்தை அபிஷேக் ஆகியோர் தலைமையில் கூட்டு திருப்பலி, மறையுரை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆரோக்கிய மாதா சொரூபம் வைக்கப்பட்டது. பின்னர் ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமானவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பாடல் பாடிய படி சென்றனர். இறை ஆசீருடன் திருவிழா நிறைவடைந்தது. இதில் சுற்றுலா பயணிகளும் கலந்துகொண்டனர்.