புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி


புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி
x

கோத்தகிரியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.

தேர்த்திருவிழா

கோத்தகிரி பஸ் நிலையம் அருகே 155 ஆண்டு பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. இதையடுத்து தினமும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அன்பியங்கள் சார்பில், பங்கு தந்தைகள் பங்கேற்ற திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 6 மணிக்கு பங்கு தந்தை ராஜநாயகம் தலைமையில் தமிழில் திருப்பலி நடந்தது.

7 மணிக்கு பங்கு தந்தை பிஜு தண்ணி கொட்டில் தலைமையில் ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் மற்றும் ஆலய பங்கு தந்தை ஞானதாஸ் ஆகியோர் தலைமையில் கூட்டுபாடல் திருப்பலியும் நடந்தது. மாலை 4.30 மணிக்கு சோலூர்மட்டம் பங்கு தந்தை அலெக்ஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. பின்னர் மாலை 6.15 மணிக்கு மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

திரளானோர் பங்கேற்பு

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோக்கிய அன்னை சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. ஆலயத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். பவனியின் போது பாடல் பாடியபடி சென்றனர். தொடர்ந்து நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஆரோக்கிய அன்னையை வழிபட்டு சென்றனர். மேலும் ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


Next Story