புனித தேத்தரவு அன்னை தேவாலய தேர் பவனி


புனித தேத்தரவு அன்னை தேவாலய தேர் பவனி
x
தினத்தந்தி 21 Aug 2023 12:30 AM IST (Updated: 21 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

புனித தேத்தரவு அன்னை தேவாலய தேர் பவனி நடந்தது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருக்குளம்பியம் கிராமத்தில் புனித தேத்தரவு அன்னை தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மின் அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் தேத்தரவு அன்னை, புனித அந்தோணியார், அருளானந்தர், சவேரியார், காவல் சம்மனசு உள்ளிட்டோர் எழுந்தருளி கிராம மக்களுக்கு காட்சி அளித்தனர். முன்னதாக ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர் பவனி பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.


Next Story