தூயமங்கள அன்னை ஆலய தேர்திருவிழா


தூயமங்கள அன்னை ஆலய தேர்திருவிழா
x

திருமானூர் அருகே தூயமங்கள அன்னை ஆலய தேர்திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் தூயமங்கள அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 88-ம் ஆண்டு ஆடம்பர மின் விளக்கு தேர் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 9-ந் தேதி கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து 5 நாட்கள் பல்வேறு பகுதிகளின் பங்கு தந்தைகளின் தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் புள்ளம்பாடி பங்குதந்தை சூசைமாணிக்கம் மற்றும் கன்னியர்கள் தலைமையில் இரவு 12 மணிக்கு மங்கள மாதா மின் அலங்கார ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

இதையடுத்து, ஆதிதூதர் மைக்கேல், புனித செபஸ்தியார், உயிர்த்த இயேசு, புனித லூர்து அன்னை, தூயமங்கள அன்னை ஆகிய 5 தேர்களை பங்குதந்தை ரெஜிஸ் புனிதப்படுத்தப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திருமழபாடி, செம்பியக்குடி, குலமாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து வருகிற 20-ந் தேதி மாலை 6 மணியளவில் புதுக்கோட்டை பங்குதந்தை ரெஜிஸ் தலைமையில் கொடியிறக்கம் நடைபெறுகிறது.


Next Story