பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய நற்கருணை பவனி


பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய நற்கருணை பவனி
x

வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய நற்கருணை பவனி நடந்தது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

சின்ன ரோமாபுரி என்று அழைக்கப்படும் வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி தூத்துக்குடி மறை வட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மறையுறை, ஜெபமாலை, ஆசீர், திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றது. விழாவில் 8-ம் நாளான நேற்று நற்கருணை பவனி அருட்தந்தை ஜான் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது.

9-ம் நாள் விழாவான இன்று (திங்கட்கிழமை) திருமண வார்த்தைப்பாடு புதுப்பித்தல் நிகழ்ச்சி, மாலையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

நாளை காலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதை தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம், தமிழ் வழியாக திருப்பலிகள் நடத்தப்படுகிறது. மாலையில் அன்னையின் தேர்ப்பவனி, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை பங்குத்தந்தை மார்ட்டின், உதவி பங்குத்தந்தை சவரி ராஜ் மற்றும் பங்கு மேய்ப்பு பணி குழு, பங்கு மக்கள் செய்துள்ளனர்.


Next Story