புனித தோமையார் ஆலய தேர்பவனி
புனித தோமையார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் புனித தோமையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய 79-வது ஆண்டு பெருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 6.30 மணியளவில் அருட் தந்தையர்கள் தலைமையில் நவநாள் திருப்பலியும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை திருச்சி அமலஅன்னை கப்புஜின் மறைமாநில அதிபர் அந்தோணிசாமி, ஏலாக்குறிச்சி பங்குதந்தை தங்கசாமி ஆகியோர் தொடங்கிவைத்தனர். தேர் பவனியில் கிராம பங்குமக்கள், சுற்றுவட்டார கிராமங்களான புதூர்பாளையம், வாணதிரையான்பாளையம், தனவளநல்லூர், விரகாலூர், திண்ணகுளம், கோவாண்டகுறிச்சி, வெங்கடாசலபுரம், நத்தமாங்குடி உள்ளிட்ட பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. பாதுகாப்பு பணியில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை தொன்போஸ்கோ, கிராம பட்டையதாரர்கள் சவரிமுத்து, பிச்சை, சகாயராஜ், ஆரோக்கியசாமி, ஞானப்பிரகாசம், அமல்ராஜ், அல்போன்ஸ்ராஜ் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.