வீடு புகுந்து நகை, பணம் திருட்டு


வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
x

கலவை அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

ராணிப்பேட்டை

கலவை

கலவையை அடுத்த மேட்டு முள்ளுவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் பாபு. அங்குள்ள பொறியியல் கல்லூரி எதிரே உள்ள சாம்ேசாங் நகரில் புதிய வீடு கட்டி வசித்து வருகிறார்.

2 நாட்களுக்கு முன்பு தனது தந்தை தனபால் மேட்டு முள்ளுவாடி இறந்து விட்டார்.

இதைப் பார்ப்பதற்காக சாம்சோங் நகரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.

இன்று வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம், 2 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து கலவை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் கைரேகை நிபுணர் செல்வி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story