வீட்டில் தீ விபத்து


வீட்டில் தீ விபத்து
x

நாகர்கோவிலில் வீட்டில் தீ விபத்து நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் வீட்டில் தீ விபத்து நடந்தது.

நாகர்கோவில் வட்டகரை பகுதியை சேர்ந்தவர் ஜெரோம். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் மாலையில் ஜெரோமின் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டின் அருகே உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த நாற்காலி, மேஜை மற்றும் சில மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

1 More update

Next Story