ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு


ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
x

நெல்லையில் வருகிற 6-ந்தேதி ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர ஊர்காவல் படையில், ஊர்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 6-தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை ஆண்கள் 39 பேர் மற்றும் பெண்கள் 7 பேர் என மொத்தம் 46 பேர் தேர்வு நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். நெல்லை மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும். 2 கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி தகுதிச்சான்று,, ஆதார் அட்டை, இருப்பிட சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல் ஆகிய ஆவணங்களுடன் நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Next Story