மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி


மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி
x

நாட்டறம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் பலியானார்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி தாலுகா கேத்தாண்டப்பட்டியை அடுத்த கூத்தாண்டகுப்பம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் ஆஞ்சநேயன் (வயது 32). ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் ஆஞ்சனேயன் தனது வீட்டில் பிளாஸ்டிக் குடத்தில் ஹீட்டர் மூலம் தண்ணீரை சுடவைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து அவரது மனைவி சீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story