வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது


வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது
x

களக்காடு அருகே வீடு புகுந்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழசடையமான்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெபமலர் (வயது 50). இவரது கணவர் சாமுவேல் கடந்த 5 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் ஜெரோம் ராஜா கங்கைகொண்டான் சிப்காட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெபமலர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். ஜெரோம் ராஜா, தோப்பூர் வடக்குத்தெருவை சேர்ந்த சுரேஷ் (27) என்பவருடைய மனைவிக்கு தவறுதலாக செல்போனில் குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சுரேசுக்குகும், ஜெரோம் ராஜாவிற்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

இதற்கிடையே நேற்று சுரேஷ், அவரது உறவினர் கீழசடையமான்குளத்தை சேர்ந்த முருகன் (55) ஆகியோர் சேர்ந்து ஜெபமலர் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த டேபிள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களையும், ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தி ரகளை செய்தனர். மேலும் அரிவாளை காட்டி, ஜெபமலரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்.

இதுபற்றி ஜெபமலர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேசை கைது செய்தனர். முருகனை தேடி வருகின்றனர்.


Next Story