விக்கிரவாண்டியில் வீட்டில் நகை திருட்டு
விக்கிரவாண்டியில் வீட்டில் நகை திருடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி செட்டீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் மனைவி மாலா(வயது 55). தனியாக வசித்து வந்த இவர், சம்பவத்தன்று, தனது வீட்டை பூட்டிவிட்டு கோயம்புத்துாரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் மாலா வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த 3½ பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளனர். மேலும் மைல்கல் தெருவில் உள்ள முரளிதரன் என்பவரது வீட்டின் பூட்டையும் மர்மநபர்கள் உடைத்து உள்ளே சென்றுள்ளனர். ஆனால் வீட்டில் பொருட்கள் ஏதும் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story