புதுக்கோட்டை இன்ஸ்பெக்டருக்கு உள்துறை மந்திரியின் பதக்கம்


புதுக்கோட்டை இன்ஸ்பெக்டருக்கு உள்துறை மந்திரியின் பதக்கம்
x

புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் உள்துறை மந்திரியின் பதக்கம் பெறுகிறார்.

புதுக்கோட்டை

குற்ற விசாரணையில் சிறப்பாக புலனாய்வு மேற்கொள்ளுதல் மற்றும் சிறந்த பணிகளுக்காக உள்துறை மந்திரியின் பதக்கம் சுதந்திர தின விழாவையொட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 140 போலீஸ் அதிகாரிகள் பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 8 பேர் பதக்கம் பெற உள்ளனர். இந்த 8 பேரில் ஒருவர் புதுக்கோட்டை உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காலத்தில் போக்சோ வழக்கு தொடர்பாக குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்று தந்துள்ளார். போக்சோ வழக்குகளை பொறுத்தவரை பொதுவாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்து விசாரிக்கப்படுவது உண்டு. இந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு போலீசில் இவர் போக்சோ வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்காக உள் துறை மந்திரியின் பதக்கம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story