தேனி, போடியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்


தேனி, போடியில்  எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
x

தேனி, போடியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள எல்.ஐ.சி. அலுவலக முகவர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர். எல்.ஐ.சி. பாலிசிதாரர்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்து, பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும். முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும். குழு காப்பீட்டை ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும். முகவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மன்ற முகவர்களுக்கு மட்டுமின்றி அனைத்து முகவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அங்கு தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். மாலை அவரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். வட்டார தலைவர் கணேசன், இணைச்செயலாளர் கோபிநாதன், கவுரவ ஆலோசகர் பாலபிரபு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முகவர்கள் போராட்டம் எதிரொலியாக எல்.ஐ.சி. அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதேபோல் போடியில் எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலிசிதாரர்களுக்கு போனசை உயர்த்தி வழங்க வேண்டும். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதற்கு போடி கிளை எல்.ஐ.சி. முகவர்கள் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். முகவர்கள் மணவாளன், சரவணன், பரணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story