80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் கவுரவிப்பு


80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் கவுரவிப்பு
x

உலக முதியோர் தினத்தையொட்டி 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் உலக முதியோர் தினத்தையொட்டி 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் கோட்டாட்சியர் பானு, நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கவுரவித்தனர். இவ்வாறு வாக்காளர்களான கோவிந்தன் (வயது 99), ராமசாமி என்பவரது மனைவி ராசம்மா (93), சாமுடி என்பவரது மனைவி (88) ஆகியோரை அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்து பழங்கள் வழங்கினர்.நிகழ்ச்சியில் துணை தாசில்தார் நடராஜன், வருவாய் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலர், கிராம உதவியாளர் உள்பட வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.


Next Story