பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாைற அரசு கல்லூரி நுழைவு வாயில் முன் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாைற அரசு கலை கல்லூரி நுழைவு வாயில் முன் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை, அக்.11-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாைற அரசு கலை கல்லூரி நுழைவு வாயில் முன் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வரக்கூடிய 45 பேராசிரியர்கள் அரசாணை எண் 56-ன்படி கவுரவ பேராசிரியர்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும். பணி நியமனத்தில் பணி அனுபவ நேர்காணல் முறையை கடைப்பிடிக்க வேண்டும். எழுத்து தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்.
சட்டக்கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்குவது போல ரூபாய் 30 ஆயிரம் வழங்க வேண்டும். மாநில தகுதி தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வால்பாறை அரசு கலை கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள் எழுப்பினர்
அப்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியபடி போராட்டம் நடத்தினார்கள்.
மேலும் தங்களது கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றித் தரும் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் பேராசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) கருப்பு பேட்ஜ் அணிந்து நுழைவு வாயிலில் வகுப்புகள் பாதிக்காதவாறு போராட்டம் நடத்தப்படும் என்று பேராசிரியர்கள் கூறினார்கள்.