திருவெண்ணெய்நல்லூர்அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


திருவெண்ணெய்நல்லூர்அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:15:41+05:30)

திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

சமவேலைக்கு சம ஊதியம், பணி பாதுகாப்பு வழங்குதல், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story