குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்


குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

கட்டுமாவடியில் குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அடுத்த கட்டுமாவடி கடைத்தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாடு, குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாடு, நடு மாடு, பெரிய மாடு, கரிச்சான் மாடு, நடுக்குதிரை என பல்வேறு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது.

பரிசு

நடுக்குதிரையில் 11 குதிரை வண்டிகளும், சின்னமாடு, பெரிய மாடு பிரிவில் 12 மாட்டு வண்டிகளும், கரிச்சான் மாடு பிரிவில் 22 மாட்டு வண்டிகளும் பந்தயத்தில் கலந்து கொண்டன. பின்னர் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டிகளுக்கு ரொக்கம், சுழற்கோப்பைகள் வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து குதிரை, மாட்டு வண்டிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த பந்தயத்தை திரளான பொதுமக்கள் சாலை நெடுகிலும் நின்று கண்டு ரசித்தனர். பந்தயத்திற்கான ஏற்பாடுகளை கட்டுமாவடி, செம்பியன் மகாதேவிப்பட்டினம், கணேசபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

9 பேர் மீது வழக்கு

இதையடுத்து அனுமதியின்றி பந்தயம் நடத்தியதாக மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், கட்டுமாவடி பகுதியை சேர்ந்த முருகேசன், ராஜாராம், கார்த்திக், மருதமுத்து, ஹரிஹரசுதன், இளையராஜா மற்றும் செம்பியன் மகாதேவி பட்டினம் பகுதியை சேர்ந்த முரளி, ராமர், சங்கரன் ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story