குதிரை-மாட்டு வண்டி பந்தயம்
காரைக்குடியை அடுத்த கல்லல் நற்கனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.
காரைக்குடி
காரைக்குடியை அடுத்த கல்லல் நற்கனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயம் கல்லல் இந்திராநகர்-மதகுபட்டி சாலையில் நடைபெற்றது. முதலில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் 30 வண்டிகள் கலந்துகொண்டு பெரிய மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை புலிமலைப்பட்டி முனிச்சாமி மற்றும் பொன்பேத்தி மருதுபாண்டியவல்லாத்தேவர் வண்டியும், 2-வது பரிசை புரண்டி பாண்டிச்செல்வம் மற்றும் மேலமடை சீமான்ராஜா வண்டியும், 3-வது பரிசை காரைக்குடி கருப்பணன் வண்டியும் பெற்றது. சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 17 வண்டிகள் கலந்து கொண்டு முதல் பரிசை சுருளிப்பட்டி சோனைமுத்தையா வண்டியும், 2-வது பரிசை கல்லல் அழகுசுகன்யா வண்டியும், 3-வது பரிசை பாகனேரி மதியாபுலிஆகாஸ் வண்டியும் பெற்றது. குதிரை வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை திருச்சி வேங்கூர் நிஷா வண்டியும், 2-வது பரிசை கல்லல் வெல்கம் பிரதர்ஸ் வண்டியும், 3-வது பரிசை திருக்கடையூர் மதுரை வீரன் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் சுதந்திர போராட்ட வீரர் சின்ன மருதுவின் பிறந்த நாளையொாட்டி சிவகங்கை முத்துப்பட்டியில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மொத்தம் 15 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக நடைபெற்றது. முதலில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை குமாரப்பட்டி விஷால் கண்ணன் வண்டியும், 2-வது பரிசை குப்பச்சிபட்டி மூவரசு வண்டியும், 3-வது பரிசை நகரம்பட்டி கண்ணன் வண்டியும் பெற்றது. பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை அப்பன்திருப்பதி ராகுல் வண்டியும், 2-வது பரிசை முத்தலாபுரம் சரவணன் வண்டியும், 3-வது பரிசை கொடிக்குளம் கவுதம் வண்டியும் பெற்றது.