சாலை விபத்தில் குதிரை படுகாயம்


சாலை விபத்தில் குதிரை படுகாயம்
x

கோவையல் சாலை விபத்தில் குதிரை படுகாயம் அடைந்தது.

கோயம்புத்தூர்

துடியலூர்

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த ஆண் குதிரை மீது அந்த வழியாக சென்றஅடையாளம் தெரியான வாகனம் மோதியது. இதில் அந்த குதிரை படுகாயம் அடைந்து சாலையோரத் தில் வலியால் துடித்தபடி கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கோவை மாநகராட்சி, விலங்குகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித் தனர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர்கள் யாரும் வர வில்லை.

உடனே அங்கிருந்தவர்கள், தனியார் கால்நடை டாக்டரை அழைத்து வந்து குதிரைக்கு சிகிச்சை அளித்தனர். அவர், குதிரைக்கு ஊசி, குளுக்கோஸ் செலுத்தி காயத்திற்கு மருந்து போட்டார். இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் பெரியநாயக் கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன் போத ்தனூரில் உள்ள விலங்குகள் மருத்துவ மையத்திற்கு காயமடைந்த குதிரையை வாகனம் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

காயம் அடைந்த குதிரைக்கு சிகிச்சை அளிக்குமாறு தகவல் கொடுத்தும் மாநகராட்சி, விலங்குகள் பாதுகாப்பு சங்கத்தினர், அரசு கால்நடை டாக்டர் வராதது வேதனை அளிக்கிறது. மேலும் குதிரை உள்ளிட்ட கால்நடைகளை சாலைகளில் திரிய விடும் உரிமையாளர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story