ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகள்
மதுக்கரை பகுதியில் ரோட்டில் சுற்றித்திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
மதுக்கரை
கோவையை அடுத்த மதுக்கரை மார்க்கெட் பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் குதிரைகள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன.
அவை, சில நேரங்களில் மாணவ- மாணவிகளை விரட்டுகின்றன. மேலும் சாலையில் வாகனங்கள் சுற்றித்திரிவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
அதோடு விபத்து நடைபெறும் அபாயமும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
இது குறித்து அந்த பகுதியினர் கூறுகையில், குதிரைகள் ரோட் டில் திரிவதால் குழந்தைகளை வெளியே விடுவதற்கு தயக்கம் உள்ளது.
குதிரைகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளின் கதவை தட்டுகின்றன.
இதனால் அச்சத்துடன் எழுந்து சென்று பார்க்கும் நிலை உள்ளது.
எனவே குதிரைகள் ேராட்டில் திரிவதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.