ஆஸ்பத்திரி ஊழியர் கைது


ஆஸ்பத்திரி ஊழியர் கைது
x

மோட்டார்சைக்கிளில் சென்றபோது மனைவியை தள்ளிவிட்ட ஆஸ்பத்திரி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிபவர் பழையபேட்டையை சேர்ந்த முத்துக்குமார் (வயது 32). இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் முத்துக்குமார் நேற்று ஆஸ்பத்திரியில் வைத்து மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகில் சென்றபோது கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் மனைவிக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. அவர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துக்குமாரை கைது செய்தார்.


Next Story