தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு


தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தங்கும் விடுதி உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு

கோயம்புத்தூர்

கோவை

கோவை தங்கும் விடுதி உரிமையாளர்கள் அசோசியேசன் சார்பில் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகரில் 700-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கே கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அதிக அளவில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கட்டணத்தில் சாப்பாடு மற்றும் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதி உரிமையாளர்களை பெரிய ஓட்டல்களுக்கு நிகராக ஜி.எஸ்.டி வரி செலுத்த நிர்பந்திக்கப் படுகின்றனர்.

மேலும் தங்கும் விடுதிகளுக்கு ரெய்டு என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து கட்டாய வரி வசூல் செய்கின்றனர். இதனால் கோவை மாநகரில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெரிய ஓட்டலுக்கு நிகராக 12 சதவீத வரி வசூலிப்பதை கைவிட்டு தங்கும் விடுதிகளுக்கு என ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதில் தங்கும் விடுதி உரிமையாளர் சங்க தலைவர் தேவராஜ், துணைத்தலைவர் ஆனந்தராமன், செயலாளர் தமிழ்மணி, துணைச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சுபத்ரா மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர்.



Next Story