ஓசூர் அருகே தரைப்பாலத்தில் வெள்ளநீர் வடிந்தது போக்குவரத்து தொடங்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி

ஓசூர் அருகே  தரைப்பாலத்தில் வெள்ளநீர் வடிந்தது  போக்குவரத்து தொடங்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி
x

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாத்தில் 3 நாட்களுக்கு பின்னர் வெள்ளநீர் வடிந்தது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாத்தில் 3 நாட்களுக்கு பின்னர் வெள்ளநீர் வடிந்தது.

தென்பெண்ணை

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று வினாடிக்கு 6,304 கனஅடி தண்ணீர் வந்தது. மேலும் வினாடிக்கு 6,478 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையில் 40.34 அடி நீர்இருப்பு உள்ளது.

இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஓசூர்- நந்திமங்கலம் சாலையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் தட்டனப்பள்ளி, சித்தனப்பள்ளி ஆகிய கிராம மக்கள் ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தரைப்பாலத்தின் வழியாக செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

கிராம மக்கள் மகிழ்ச்சி

மேலும் அந்த வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் கடந்த 3 நாட்களாக முத்தாலி வழியாக 10 கி.மீட்டர் தூரத்தை கடந்து சென்று வரும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் 3 நாட்களுக்கு பின்னர் தரைப்பாலத்தில் தண்ணீர் வடிந்தது. இதனால் நேற்று மாலை முதல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதையொட்டி கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Next Story