ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்துரசாயனம் கலந்து நுரை பொங்கி வெளியேறும் தண்ணீர்


ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்துரசாயனம் கலந்து நுரை பொங்கி வெளியேறும் தண்ணீர்
x
தினத்தந்தி 7 May 2023 12:30 AM IST (Updated: 7 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று அணைக்கு வினாடிக்கு 720 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 720 கனஅடி நீரும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த பல நாட்களாக அணை நீரில் ரசாயன கழிவுகள் கலந்து நுரை பொங்கி துர்நாற்றத்துடன் வெளியேறி வருகிறது. குவியல், குவியலாக நுரை வெளியேறுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பொங்கி வரும் நுரை குவியலில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடுகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story