கிராம உதவியாளரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் கைது


கிராம உதவியாளரை தாக்கிய ஓட்டல் உரிமையாளர் கைது
x

சிவகிரி அருகே கிராம உதவியாளரை தாக்கிய ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி தாலுகா நாரணபுரம் கிராமத்தில் விருதுநகர் -ராஜபாளையம் செங்கோட்டை வரை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டத்திற்கு நிலம் எடுப்பு தொடர்பாக நேற்று தாலுகா அலுவலகத்தில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) அனிதா முன்னிலையில் விசாரணை நடைபெற இருந்ததால் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் தகவல் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் கிராம உதவியாளர் கருணாலய பாண்டியன், கோட்டையூர் என்ற ஆத்துவழிக்கு வடபுறம் சர்க்கரை ஆலைக்கு அருகே ஓட்டல் நடத்தி வரும் ஜெயராமன் (வயது (60) என்பவரிடம் தகவல் அளிக்க சென்றார். அப்போது ஜெயராமன், கிராம உதவியாளர் கருணாலய பாண்டியனை அவதூறாக பேசி தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த கருணாலய பாண்டியன், சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரி்ன் பேரில் வாசுதேவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தார்.


Next Story