கந்து வட்டி கொடுமையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முயற்சி


கந்து வட்டி கொடுமையால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கந்து வட்டி கொடுமை யால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக கடன் வாங்கி மோசடி செய்த நண்பர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்


கணபதி

கந்து வட்டி கொடுமை யால் ஓட்டல் உரிமையாளர் தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக கடன் வாங்கி மோசடி செய்த நண்பர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓட்டல் உரிமையாளர்

கோவை கணபதியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் குனியமுத்தூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது கல்லூரி நண்பரான பன்னீர்மடையை சேர்ந்த சேவுகபழனியப்பன் என்பவருக்கு ரூ.3.75 லட்சம் கடன் கொடுத்தார்.

அந்த பணத்தை திருப்பி தருமாறு நவீன்குமார் பல முறை கேட்டு உள்ளார். ஆனால் சேவுக பழனியப்பன் பணத்தை தராமல் காலம் கடத் தியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பணநெருக்கடிக்கு ஆளானார்.

இந்த நிலையில், தனது தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்காக நவீன்குமார், மதுக்கரை சீராபாளையத்தை சேர்ந்த சபரிநாதன் (35) என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அதற்கு அவர், வட்டியுடன் சேர்த்து தினசரி ரூ.2 ஆயிரத்தை செலுத்தி வந்ததாக தெரிகிறது.

விஷம் குடித்தார்

ஆனால் சபரிநாதன் கூடுதல் வட்டி கேட்டு தொந்தரவு செய்ததாகவும், இல்லை என்றால் ஓட்டலை தன்னிடம் ஒப்படைக்கு மாறு கேட்டதாகவும் தெரிகிறது.

கடன் வாங்கிய நண்பர் சேவுகபழனியப்பன் பணத் தை தராமல் மோசடி செய்த நிலையில், கந்து வட்டி கேட்டு சபரிநாதன் தொல்லை கொடுத்ததால் மனவேதனை அடைந்த நவீன்குமார், சம்பவத்தன்று காரமடையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை நண்பர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக குரும்பபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

2 பேர் கைது

இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில்,கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தியதாக சபரிநாதன் மற்றும் நவீன்குமாரி டம் கடன் வாங்கி மோசடி செய்த சேவுகபழனியப்பன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story