டேங்கர் லாரி மோதி ஓட்டல் உரிமையாளர் பலி


டேங்கர் லாரி மோதி ஓட்டல் உரிமையாளர் பலி
x

ஆற்காட்டில் டேங்கர் லாரி மோதி ஓட்டல் உரிமையாளர் பலியானார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு குட்டைக்கார தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 37), வாலாஜாவில் ஓட்டல் நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஆற்காடு நோக்கி வந்துள்ளார். ஆற்காடு பழைய மேம்பாலம் திருப்பத்தில் வரும்போது எதிரே வந்த டேங்கர் லாரி சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story