கடலூரில் ஓட்டல் தொழிலாளி தற்கொலை காதல் மனைவி கோபித்துச் சென்றதால் விபரீத முடிவு


கடலூரில்    ஓட்டல் தொழிலாளி தற்கொலை    காதல் மனைவி கோபித்துச் சென்றதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் காதல் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்


திருப்பாதிரிப்புலியூர்,

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் காளீஸ்வரன் (வயது 30). இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்து மீனா என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் காளீஸ்வரன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கடலூர் வந்து திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தார்.

இதற்காக அவர் கூத்தப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, குடும்பத்துடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் காளீஸ்வரன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால், முத்து மீனா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த காளீஸ்வரன் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய காளீஸ்வரன் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் மனைவி கோபித்து சென்றதால் ஓட்டல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story