ஓட்டல் தொழிலாளி 'திடீர்' சாவு


ஓட்டல் தொழிலாளி திடீர் சாவு
x

ஓட்டல் தொழிலாளி திடீரென உயிரிழந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன்(வயது 45). இவர் கடந்த 2 மாதங்களாக பெரம்பலூரில் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை கண்ணதாசன் திடீரென்று மயங்கி விழுந்தார். இதனை கண்ட அவர் கூட இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கண்ணதாசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கண்ணதாசனின் மனைவி நிர்மலா கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story