ஓட்டல் தொழிலாளி பலி
நத்தம் அருகே சாலையோர தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி ஓட்டல் தொழிலாளி பலியானார்.
திண்டுக்கல்
நத்தம் அருகே உள்ள சமுத்திராபட்டி, அம்மாபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராமராஜன் (வயது 32). இவர், சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ராமராஜன் நேற்று சடையம்பட்டி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன ராமராஜனுக்கு சினேகா என்ற மனைவியும், வர்னேஷ் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story