8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம்: சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக 100 டிகிரி தாண்டிய வெயில்..!


8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம்: சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக 100 டிகிரி தாண்டிய வெயில்..!
x

சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியேற தயங்குகின்றனர். மேலும், வெப்பத்தை தனிக்க மக்கள் இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளை நாடிச்செல்வதை கான முடிகிறது. வெயில் கோர முகத்தை காட்டி வாட்டி வதைப்பதால், மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாகியுள்ளது. இது 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று 108.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

வெயிலின் தாக்கம் இனி வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story