வீடு புகுந்து 4 பவுன் நகை-ரூ.12 ஆயிரம் திருட்டு

வீடு புகுந்து 4 பவுன் நகை-ரூ.12 ஆயிரம் திருட்டு
x

வீடு புகுந்து 4 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரத்தை திருடிய மர்ம ஆசாமிளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

வீடு புகுந்து 4 பவுன் நகை மற்றும் ரூ.12 ஆயிரத்தை திருடிய மர்ம ஆசாமிளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீடு புகுந்து திருட்டு

திருச்சி, கிராப்பட்டி, காந்திநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராதா (வயது 43). இவர் தனது வீட்டின் முன்பு சைக்கிள் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2-ந்தேதி சைக்கிள் கடை வழியாக வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி, அங்கு இருந்த 4 பவுன் தங்க நகைகள், ரூ.12 ஆயிரத்தை திருடி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்ைத திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.

Next Story