வீடு புகுந்து நகை-பணம் திருட்டு


வீடு புகுந்து நகை-பணம் திருட்டு
x

ராமநத்தம் அருகே வீடு புகுந்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

ராமநத்தம்,

ராமநத்தம் அடுத்த பெரங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் நடேசன் (வயது 41). இவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றார். பின்னர் நேற்று மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.

அதில் வைத்திருந்த 8 பவுன் நகை, ரூ.27 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மா்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story