வீடு புகுந்து வெள்ளி பொருட்கள், பணம் திருட்டு
வீடு புகுந்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடிய மா்மநபா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள எஸ்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மனைவி ராமாயி அம்மாள். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள அவரது இளைய மகன் ரமேஷ் என்பவரின் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவுக்காக சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ராமாயிஅம்மாள் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது யாரோ மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த ½ கிலோ வெள்ளி தட்டு, வெள்ளி காமாட்சி விளக்கு, வெள்ளி குங்குமச்சிமிழ் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று இருப்பது தொியவந்தது. இது குறித்து ராமாயிஅம்மாள்கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.