பா.ஜனதா பிரமுகர் வீடு-கார் தாக்கப்பட்ட வழக்கு: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது
பா.ஜனதா பிரமுகர் வீடு-கார் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர்
பா.ஜனதா பட்டியல் அணி மாநில தலைவரான பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை ரோவா நகரை சேர்ந்த தடா பெரியசாமியின் வீடு, கார் மீது மர்ம கும்பல் கடந்த 14-ந்தேதி நள்ளிரவு தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றது. இந்த தாக்குதலில் அவரது பேரன் காயமடைந்தான். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை வலைவீசி தேடி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, புத்தூர் மேலத்தெருவை சேர்ந்த ரஞ்சித்குமாரை (வயது 31) போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ரஞ்சித்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இளைஞர் எழுச்சி பாசறையின் கொள்ளிடம் ஒன்றிய அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story