மழைக்கு வீடு இடிந்து தாய்-மகன் காயம்


மழைக்கு வீடு இடிந்து தாய்-மகன் காயம்
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் தாய்-மகன் காயம் அடைந்தனர்

தென்காசி

கடையம்:

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள மலையான்குளத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 66). இவரது மனைவி பாக்கியலட்சுமி (65). இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர். இதில் முதல் 3 மகன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. கடைசி மகனான மகேஷ் (22) எழுந்து நடக்க முடியாத நிலையில் மாற்றுத்திறனாளியாக உள்ளார். இவர் தாய்-தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்தது. இதில் சாமிக்கண்ணுவின் வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பாக்கியலட்சுமியின் தலை, தோள்பட்டை மற்றும் மகேஷின் காலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் பாக்கியலட்சுமி அம்பை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.


Next Story